குழந்தைகள் என்றாலே அழகு தான், அதுவும் அவர்கள் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையும் ரசிக்கும்படியாக இருக்கும். முதலில் சத்தம் போடுவார்கள், தவழுவார்கள், எழுந்து நடப்பார்கள் இப்படி குழந்தைகள் செய்யும் விஷயங்களை பார்க்கும் போது கஷ்டத்தில் இருக்கும் ஒருவர் அதை அப்படியே மறந்துவிடுவார். பிறந்தது முதல் 15வது மாதம் வரை குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
முதல் மாதம்
கை, கால்களில் லேசான அசைவு இருக்கும், எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். உடலில் ஏதாவது வலிகள் ஏற்பட்டால் குழந்தை அழும்.
இரண்டாம் மாதம்
அசைவுகளை உணரும், அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.
மூன்றாம் மாதம்
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு திரும்பி பார்ப்பார்கள்.
4ம் மாதம்
நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.
5ம் மாதம்
திரும்பி படுக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களால் திரும்ப முடியாது, தோல்வியிலே முடியும்.
6ம் மாதம்
முதலில் பால் பற்கள் முளைக்கத் துவங்கும். பேசுவதற்கு வாயைக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள்.
7ம் மாதம்
இந்த மாதத்தில் குழந்தைகள் திரும்பி படுக்க, மல்லாக்க படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் உட்கார வைத்தால் உட்காருவார்கள்.
8ம் மாதம்
சில பொருட்களை வைத்து கொண்டு விளையாடுவார்கள். அதையும் கையில் ஏதாவது இருந்தால் வாயில் தான் முதலில் வைப்பார்கள். தள்ளாடிக் கொண்டு நிற்க ஆரம்பிப்பார்கள்.
9ம் மாதம்
ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.
10ம் மாதம்
தெரிந்தவர்களிடம் மட்டும் செல்வது, டாடா சொல்வது, உணவை மறுப்பது போன்றவைகள் இம்மாதத்தில் நடக்கும்.
12ம் மாதம்
இம்மாதத்தில் ஓரளவுக்கு பொருட்களையும், ஆட்களையும் அடையாளம் காட்ட துவங்குவார்கள். பற்கள் முலைத்திருக்கும், விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள்.
15வது மாதம்
தனியாக நடப்பார்கள், உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள், படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.