இரண்டே நிமிடத்தில் உடல் சூட்டைக் குறைக்க சூப்பரான வழி இதோ!

ஒருவரின் உடம்பில் உஷ்ணம் அதிகரிப்பதால், அவர்களின் உடல் எப்போதும் அதிக வெப்பத் தன்மை கொண்டதாக இருக்கும்.

உடம்பில் வெப்பத் தன்மை அதிகரிப்பதால், நமது உடம்பின் ஆரோக்கியம் முழுவதையும் இழந்து, தலைமுடி உதிர்தல், முகப்பருக்கள், வயிற்று வலி, உடல்எடை குறைதல், தோல் வியாதிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே இயற்கையான வழியின் மூலம் நமது உடம்பின் அதிகப்படியான வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியான தன்மையை பெறுவதற்கு, சூப்பரான டிப்ஸ் இதோ!

தேவையான பொருட்கள்
  • நல்லெண்ணெய்
  • பூண்டு
  • மிளகு
செய்முறை

தேவையான அளவு நல்லெண்ணெய்யை எடுத்துக் கொண்டு அதை மிதமாக சூடுபடுத்த வேண்டும்.

பின் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சிறிது நேரம் சூடுபடுத்தி இறக்க வேண்டும்.

தயார் செய்த எண்ணெய் ஆறியதும், நம்முடைய இரண்டு கால்களின் பெருவிரல் நகத்தின் மட்டும் தடவி இரண்டு நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இதனால் உங்களின் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

குறிப்பு

காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றக் கூடாது.

ஏனெனில் இந்த எண்ணெய் நமது உடம்பிற்கு அதிகமான குளிர்ச்சியை தருவதால், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.