4முறை உயிர் தப்பிய 100 வயது பாட்டியை வேன் ஏற்றிக் கொன்ற நபர்

ஜொகானி றோஸ்ஹில் என்னும் 100 வயது பாட்டி மீது, ரெனோல்ட் வாகனம் ஒன்றை ஏற்றி ஒருவர் கொன்றுள்ள சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள சவுத் -என் என்னும் மாநரில் வசித்து வந்த றோஸ்ஹில்லு 11 பூட்டப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இவருக்கு வயது 100. இவருக்கு 4 தடவை மாரடைப்பு ஏற்பட்டு தப்பியுள்ளார். மேலும் புற்று நோய் தாக்கியும், அதில் இருந்து கூட தப்பி உயிர்வாழ்ந்து வந்துள்ளார்.

இன் நிலையில் தான் வசிக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள அஸ்டா சூப்பர் மார்கெட்டில், காலை உணவு வாங்கச் சென்ற அவர் மீது ரெனோல்ட் வேன் ஒன்று மோதி, அவரை தரையில் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வானத்தை 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் ஓட்டியாதாகவும். திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவர் மோதியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.