இன்றைய ராசி பலன் 02-12-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தரு வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியமான முடிவுகளெடுக் கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கிய வர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசு வார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்ேயாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • மீனம்

    மீனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.