ரேக்கிங் கொடுமை தாங்காமல் கட்டிடத்தில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஆந்திராவை சேர்ந்த 21 வயது மருத்துவக்கல்லூரி மாணவி ரேக்கிங் கொடுமையை தாங்க முடியாமல் கல்லூரி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஜிஎஸெல் மருத்துவகல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்த சுபாஸ்ரீ என்ற மாணவி நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டார். ரேக்கிங் கொடுமையால் அவர் கட்டிடத்தின் மேல்பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரேக்கிங் குறித்து சுபாஸ்ரீ ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்திருந்ததாகவும், ஆனால் கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.