குழந்தைகளை மகிழ்வித்த கோமாளி மனிதர் பலி! சோகத்தில் பிஞ்சுகள்

சிரியாவில் போர் சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகளை கோமாளி வேடம் அணிந்து மகிழ்வித்து வந்த சமூக பணியாளர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலெப்போ நகரில் நடந்த தாக்குதலில் 24 வயதான சிக்கி அனஸ் அல் பாஷா கொல்லப்பட்டுள்ளார்.

அலெப்போவை விட்டு வெளியேற மறுத்த அனஸ் அல் பாஷா குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தின் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அலெப்போவில் பேர் சூழலில் இருக்கும் குழந்தைகளை அனஸ் அல் பாஷா கோமாளி வேடம் அணிந்து மகிழ்ச்சியாக படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அலெப்போ நகரில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் அனஸ் அல் பாஷா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செய்தி அப்பகுதி குழந்தைகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.