கர்ப்பிணியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மிருகங்கள்! காரணம் என்ன?

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணை மாமனார், மாமியார் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி அருகே லெக்கனாம்பேட்டையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 69 வயது செல்வராஜ் மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

செல்வராஜ், புஷ்பவள்ளி தம்பதிகளின் இளைய மகன் திருஞானம் சில வருடங்களுக்கு தீபா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். பின்னர், தீபாவை அவரது வீட்டில் விட்டு திருஞானம் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், அண்ணனின் சாவுக்காக சொந்த ஊர் வந்த திருஞானம், தீபாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, திருஞானத்தின் பெற்றோர்கள் தீபாவை வீட்டிற்குள் விட மறுத்து அவரை கர்ப்பிணி என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தீபாவை மீட்டுள்ளனர். பின்னர், இக்கொடூர செயலில் ஈடுபட்ட செல்வராஜ், புஷ்பவள்ளியை கைது செய்துள்ளனர்.