ஸ்ரீலங்கா, தனியொரு இனத்திற்கு உரியது என்ற கருத்தை நிராகரித்துள்ள தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன், அனைத்து இனத்தவரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக சில இடங்களில் எழுதுகின்றனர். சிங்களத்தில் பெரிதாக எழுதுகின்றனர். எழுதவேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சின்னதாக எழுதுகின்றனர்.
தற்போது நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எனது கட்சியைச் சேர்ந்தவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
எனினும், ‘கண்டி’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘குண்டி’ போட்டு எழுதுகின்றனர். அதன் அர்த்தத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை டிப்போவில் குருடன் ஒருவனே பொறுப்பதிகாரியாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.