புதுவருடத்தில் புதிய எரிபொருள் கட்டணங்களா?

அடுத்த வருடம் முதல் ஒரு பீப்பா மசகெண்ணை நுாற்றுக்கு பத்து வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஒபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்பொழுதுள்ள 41.94 அமெரிக்க டொலராகவுள்ள ஒரு பீப்பா மசகெண்ணைக்கான விலை, 2017 ஆம் ஆண்டு முதல் 51.94 அமெரிக்க டொலராக அதிகரிக்கவுள்ளது.

ஒபெக் நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டு முதல் ஒரு நாளைக்கு விநியோகிக்கவுள்ள மசகெண்ணை அளவை, 12 லட்சம் பீப்பாக்களால் குறைப்பதற்கு அந்நிறுவனம் எடுத்துள்ள தீர்மானமே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 வருடங்களின் பின்னர் உற்பத்தியைக் குறைப்பதற்கு ஒபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஒபெக் நிறுவனத்தின் கீழுள்ள எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளினால் தற்பொழுது ஒரு நாளைக்கு மசகெண்ணை 1.6 கோடி பீப்பாய்கள் சந்தைக்கு விடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.