எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்  கை நாட்டு என்று குறிப்பிடப்படுகிறார்கள்.விரல் ரேகை வைப்பதைத் தான் கைநாட்டு என்று கூறுகிறார்கள்.

ஒரு நபரின் விரல்ரேகை அமைப்பைக் கொண்டு அவரை அடையாளம் காணும் முறையை 1892-ல் Sir.Francis Galton எனும் ஆங்கில அறிஞர் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

எனவே விரல்ரேகை பற்றிய பாடம் (DACTYLOGRAPHY) கோல்டன் முறை( Galton system)என்று அழைக்கப்படுகிறது.

தாயின் கருப்பையில் நான்கு மாதக் கருவாக இருக்கும்போதே விரல்ரேகை உருவாகி விடுகிறது.

பின்னர் எப்போதுமே மாறாது.இந்த ரேகை அமைப்பு -தோலின் புறத் தோல் (Epidermis),அடித் தோல் (Dermis)ஆகிய தோலின் இரு அடுக்குகளிலும் பதிந்துள்ளது..

ஒருவருடைய விரல் ரேகை அமைப்பு மற்றொருவருடைய விரல் ரேகை அமைப்புடன் ஒத்திருக்காது.

சுமார் 6400 கோடி மக்களில் மட்டுமே இருவருக்கு ஒரே மாதிரி விரல்ரேகை அமைய வாய்ப்புண்டு.

ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகளுக்குக் கூட ஒத்து இருக்காது என்பது மிகவும் விந்தையானது.

கொலைகாரன்,கொள்ளைக்காரன் கண்டுபிடிக்க, அடையாளம் தெரியாத நபர்-விபத்து,தற்கொலையால்  இறந்தவரைக் கண்டுபிடிக்க,ஆள் மாறாட்டம் செய்யாமல் தடுக்க,விரல் ரேகை பயன்படுகிறது.

முன்னர் இடது கைப் பெருவிரல் ரேகை மட்டுமே பதிவு செய்யப் பட்டது.தற்போது பாஸ் போர்ட் விசா,கால் விரல்களிலும் ரேகை உண்டு.

குரங்குகளுக்கும் விரல் ரேகை உண்டு. கைரேகை ஜோசியம் பார்ப்பவர்கள் – உள்ளங்கை ரேகை மட்டுமே பார்க்கிறார்கள்.

விரல்ரேகை பற்றி அவர்களுக்குத் தெரியாது..குரங்குகளுக்கு உள்ள கைரேகைகளில் கல்வி ரேகை,தனரேகை,ஆயுள் ரேகை,தாம்பத்திய ரேகை உண்டா? என எனக்குத் தெரியாது.

அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.ரேகை அமைப்பை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலமாகக் கூட மாற்ற முடியாது.

விரல் ரேகைகளில் அமைந்துள்ள கோடுகளின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அவை-

1.லூப் வகை

2.வளைவு வகை

3 .வட்ட வகை

4.கலவை வகை ஜ மூன்று வகைகளின் கலவை உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள் ரேகையை ஒரு தாளில் பதிவு செய்து எந்த வகை என்று கண்டுபிடியுங்கள்.