இ.போ.ச. பஸ்கள் மீது தாக்குதல்!

நாடாளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக,சேவையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தண்டப்பணம் அதிகரிப்பிற்கு எதிராக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்ற நிலையில், இலங்கைபோக்குவரத்து சபைக்கு சொந்தமான 20 பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கைபோக்குவரத்து சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னிட்டு,கடந்த மாதம் போக்குவரத்துஅமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் 6,000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.