ஒரு தனியார் டீவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆணின் சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்த குஷ்பு மீது சமூக வலைதளங்களிலும் .. தனியாக பேசிக் கொள்ளும் போதும் மக்கள் கண்டனம் தெரிவித்து பாய்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் பிரபலங்கள் அதிலும் குறிப்பாக சினிமா உலக பிரபலங்களும் அடக்கம்.
ஒரிரு தினங்களுக்கு முன் நடிகை ஸ்ரீப்ரியா, குஷ்புவுக்கு-
‘ இப்படி பஞ்சாயத்துக்கள் செய்வதைவிட சமூகத்திற்கும் தன் துறை சார்ந்த தேவை இருப்பவர்களுக்கும் பணியாற்றலாம்! பிரச்சனை உள்ளவங்களுக்கு சட்டரீதியாக உதவலாம். இந்த நிகழ்ச்சி இந்த முரட்டுத்தனம் தேவை இல்லாதது’- என ஆரம்பித்து பிரித்து மேய்ந்திருந்தார்.
இப்போது அதை விட காட்டமாக கருத்து சொல்லி இருக்கிறார் மற்றொரு பிரபல நடிகை ரஞ்சனி.இவர் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் உட்பட பல வெற்றி படங்களில் வெள்ளி விழா படங்களில் நடித்தவர்.
அவர் குஷ்புவை நேரடியாகவே போட்டுத் தாக்கித் தள்ளி இருக்கிறார்.
“பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு இப்படி ஒரு ரவுடியைப் போல நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது.
குடும்ப பிரச்சினைக்கு அட்வைஸ் தருவதாகச் சொல்லி இப்படி நடந்து கொள்வது ஒரு கேவலமான செயல்.
வாஸ்தவத்தில் குடும்ப பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு குஷ்புவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
மக்களே, நீங்கள் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறிர்களா?
இதற்காக ஆலோசனனை வழங்க கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்! மருத்துவர்கள் இருக்கிறார்கள்! தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன..நீங்கள் அவற்றை நாடுவதே நல்லது”—என்று போட்டு தாக்கி இருக்கிறார் அவர்.
இதே ரீதியில் தெலுகுச் சேனலில் நிகழ்ச்சி நடத்தும் நடிகை கீதா ஓரினச் சேர்க்கை பெண்களுக்கான பஞ்சாயத்தில்,’அவளோட எப்படி செக்ஸ் வச்சுப்பே? வெட்கமாயில்லை? செருப்பாலடிப்பேன்!’-என பேசியது கடந்த வாரம் சர்ச்சையானதும்…இப்படி நிகழ்ச்சி நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டலடித்த ஊர்வசிக்கும்,’மொதல்ல நீ ஒழுங்கா இரு’ என கண்டனம் பெருகுவதும் கவனிக்கத்தக்கது.