நயன்தாரா அரசியலுக்கு வருகிறார் என்று ஒரு கிசுகிசு கோலிவுட்டில் வந்துகொண்டு இருக்கிறது. ஏனென்றால், ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு போன வருஷம் நயன் வந்தபோது கூடிய கூட்டத்திலிருந்து நயனுக்கு ஆளும் அரசியல் ஆசை வந்துவிட்டதாம்.
அதனால் தான் , காதலித்து, டூயட் பாடும் சாதாரண ஹீரோயின் வேஷங்களில் இனி நடிக்காமல் இமேஜ் பில்ட் பண்ணும் கேரக்டரில் நடிக்க உள்ளாராம்.
ஹீரோயின் ஓரியண்ட் படங்களை மட்டுமே பண்ணவேண்டும் என்பதால்…தன் சொந்த பேனரிலே நடிக்க விரும்புகிறாராம்.
அறம் படத்தில் கலெக்டராக மக்களுக்கு நல்லது செய்பவராக நடித்தது எல்லாம் அரசியலுக்கு அடியெடுத்து வைப்பதற்காக எடுத்து வைக்கும் அடித்தளமாம்.
விஜயசாந்தி போல, லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் …அவர் பாதையிலேயே சென்று அரசியலிலும் குதிக்கப்போகிறார் நயன் என்பது தான் லேட்டஸ்ட் டாக் ஆப் கோலிவுட்.