அடுத்த ஜனாதிபதியாக வருவது நீங்களா? அல்லது மஹிந்தவா? என பஸில் ராஜபக்ஸவிடம் ஒரு பகீர் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பஸில் ராஜபக்ஸ சிரித்தவாறே “நான் இல்லை” என்ற பதிலை கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஜனாதிபதி பதவி அவசியமா இல்லையா என்ற விவாதத்தை விட, இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக மஹிந்தவே தேவைப்படுகின்றார். இதுவே தற்போதைய நிலை என அடித்துக் கூறினார்.
மஹிந்தவே அடுத்த ஜனாதிபதியாக வருவார், நான் இல்லை எனவும் பஸில் சிரித்தவாறே கூறியுள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு நடந்ததே மஹிந்தவுக்கும் நடக்கும் என அண்மையில் எஸ்.பி திஸாநாயக்க கூறினார். இது பற்றி பஸிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது,
எஸ்.பி திஸாநாயக்க இன்னும் எம்முடன் இணையவில்லை. அப்படி இருக்க அவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும், என்றார்.
எஸ்.பி புதுக்கட்சியில் இணைய வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்கப்பட்ட போது, சேர்த்துக்கொள்வோம், ஒதுக்கிவிடுவோம் என்று பிரிவுகள் இல்லை என பஸில் தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு 12 கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் டிலான் பெரேரா கூறும் வார்த்தை ஒன்று உள்ளது. ஏன் அப்படி கூறுகின்றார்? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கும் வித்தியாசமான பதிலையே பஸில் கூறினார். “அவர் நல்லவர், அண்மையில் நடக்கும் விடயங்களை வைத்துப் பார்க்கும் போது அவர் மிகவும் நல்லவர் என்றே தோன்றுகின்றது” எனக் கூற சபையில் இருந்த அனைவரும் சிரித்தமை குறிப்பிடத்தக்கது.