என் மகளின் எதிர் காலம் என்னாகும்…? ராசாத்தி அம்மாள் கதறல்…! தளபதி தான் இனி கதி….!?

கலங்கிப் போய் இருக்கும் கலைஞர் குடும்பம்..! கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

யாருக்கு என்ன செய்ய வேண்டும், யார் யாரை செட்டில் செய்வது போன்ற எந்த முடிவும் இதுவரை கலைஞர் எடுக்கவே இல்லை..!

குறைந்த பட்சம் தளபதியை தலைவரராக அறிவித்து விடுவார் என்ற எதிர் பார்ப்பு கூட பொய்யாகி விட்டது.

பேராசிரியர் கலைஞரை சந்தித்த போது கூட இதைவிட வேறு சந்தர்ப்பம் இல்லை..தளபதியை தலைவர் ஆக்கி விடுங்கள் என்று கூறினாராம்.

அதற்கு சம்மதம் கொடுத்து விட்டார் கலைஞர் என்கிறார்கள். இங்கு தான் சிக்கல்..!? காரணம் கலைஞர் ஆலிவர் ரோட்டில் உள்ள ராசாத்தியம்மாள் இல்லத்திற்கு சென்று மாதக் கணக்கில் ஆகி விட்டதாம்.

இதனால், கனிமொழி எதிர்காலம் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவே இல்லை..! இதனால் ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார் ராசாத்தி அம்மாள்..!

அடுத்த மாதம் பொதுக் குழு கூட இருக்கிறது. அங்குதான் தளபதிக்கு முடி சூட்டுவார்கள். அழகிரி..கனிமொழி நிலைமை என்ன என்பது அப்போது தான் தெரியும்..!

கிலி பிடித்துப் போய் இருக்கிறார், கனிமொழி தாயார்..