உங்களுக்கு எந்த இடத்தில் கொழுப்புகள் அதிகம் உள்ளது?

இங்கு ஐந்து வகையான உடலமைப்புக்களைக் குறித்தும், அந்த உடலமைப்புக்களைக் கொண்டவர்கள் எந்த மாதிரியான செயல்களை மேற்கொண்டால், அழகிய உடலமைப்பைப் பெறலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது உடலின் குறிப்பிட்ட பகுதியில் கொழுப்புகள் தேங்குவதற்கும், அவரது பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே ஒருவரது அந்த கெட்ட பழக்கங்களைத் தெரிந்து கொண்டால், உடலில் தேங்கும் கொழுப்புக்களை எளிதில் கரைக்கலாம்.

இங்கு ஐந்து வகையான உடலமைப்புக்களைக் குறித்தும், அந்த உடலமைப்புக்களைக் கொண்டவர்கள் எந்த மாதிரியான செயல்களை மேற்கொண்டால், அழகிய உடலமைப்பைப் பெறலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

உடலின் மேல் பகுதி

உடலின் மேல் பகுதியான கைகள், தோள்பட்டை, மார்பு, வயிறு போன்ற இடங்களில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தால், அந்த வகையான உடலமைப்பைக் கொண்டவர்கள் போதிய உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர் என்ற அர்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

உடலின் மேல் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருப்பவர்கள், உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களை செய்வதுடன், தினமும் 500-1000 கலோரிகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் வாரத்திற்கு 5 நாட்கள் 30-60 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் கார்டியோ உடற்பயிற்சிகள் மற்றும் சில சிட்-அப் மற்றும் புஷ்-அப்களை செய்வது நல்லது.

அடிவயிற்று பகுதி

அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் உற்பத்தி அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

இந்த வகையான உடலமைப்பைக் கொண்டவர்கள் தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஒருவேளை வயிறு எப்போதும் உப்பிய நிலையில் இருந்தால், அளவுக்கு அதிகமான மதுவை பருகியதால் தான் இருக்கும். மேலும் இவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பார்கள். இந்நிலையில் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் மற்றும் உடனே மருத்துவரை அணுகி மூச்சு பிரச்சனைகள் குறித்து தெரிவித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

முதுகுப் பகுதி

முதுகுப் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகமாக இருந்தால், ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுகிறீர்கள் அல்லது உணவைத் தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உடலுழைப்பில் ஈடுபடுவதே இல்லை என்பதையும் குறிக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

இப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க, ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வதுடன், தினமும் கலோரிகள் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் இத்தகையவர்கள் தினமும் நீச்சல், வாக்கிங், ரன்னிங் மற்றும் சில முதுகுப் பகுதிகளுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அடிவயிறு, தொடை மற்றும் பிட்டப் பகுதி

இந்த பகுதிகளில் பெண்களுக்கு தான் கொழுப்புக்கள் அதிகம் சேரும். இப்படி இப்பகுதிகளில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு, போதிய உடலுழைப்பு இல்லாதது தான் காரணம்.

என்ன செய்ய வேண்டும்?

இந்த வகை உடலமைப்பைக் கொண்டவர்கள், சைக்கிளிங், உடலின் கீழ் பகுதிக்கான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கால், பிட்டம் மற்றும் அடிவயிற்றுப் பகுதி

பிரசவம் காரணமாக உடலின் கீழ் பகுதியில் பெண்களுக்கு தான் கொழுப்புக்கள் சேரும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்த வகை உடலமைப்பைக் கொண்டவர்கள், தினமும் உடலின் கீழ் பகுதிக்கான உடற்பயிற்சியில் ஈடுபடுவதுடன், சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.