ரஜினியின் ரசிகர்களை உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்த படம் கபாலி. இந்த படம் ஜுலை 22ம் தேதி வெளியாகியிருந்தது. ஹிந்தியிலும் அதே நாளில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ஒரு தொலைக்காட்சி நவம்பர் 20ம் தேதி ஒளிபரப்பியுள்ளது. அப்படி கபாலி படம் ஒளிபரப்பப்பட்ட அந்த தொலைக்காட்சி சுமார் 53.49 லட்சம் பார்வையாளர்களை அதிகம் பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த கபாலி படம் தற்போது தொலைக்காட்சிகளிலும் சாதனை படைத்து வருகிறது.