பச்சைக்குத்தும் போது ஒரு முறைக்கு பலமுறை யோசியுங்கள்..

பச்சை குத்துதல் ஐரோ-ஆசியா நாடுகளில் கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ளதாகும். கி.மு 4000 முதல் 5000-ம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஓட்சி பனிமனிதனின் கை, கால்களில் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன.

எப்பொழுது மனிதன் நாகரிகத்தின்பால் தன்னுடைய நாட்டத்தினைக் காண்பிக்க ஆரம்பித்தானோ அக்கணமே பச்சை குத்துதல் என்னும் கலையும் வளர ஆரம்பித்துவிட்டதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகிர்கினறனர்.

பண்டைய காலத்தில் இறந்தவர்களின் தோல் மம்மிகளின் உதடுகள் போன்றவை பச்சை குத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன வரலாறு எண்ணற்றுக் கிடக்கின்றது.

அந்த வகையில் பச்சை குத்துதலானது உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்தி பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுப்படுத்திக் கொள்வது என சொல்லலாம்.

ஆனால் நவீன காலத்தில் உடலில் தோலின் கீழாக அழியாதமையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்வது என கூறப்படுகின்றது.

ஆரம்பகாலத்தில் பாரம்பரியம் சார்ந்ததாக காணப்பட்ட இந்த பச்சை குத்தும் சம்பிரதாயம் தற்பொழுது நாகரிகத்திற்காகவும், அழகிற்காகவும் குத்தப்படுகின்றது.

மேலும் பண்டைய காலத்தில் விலங்குகளை இனங்காணவும் பச்சை குத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை, இந்தியா ”ஜனு” எனப்படும் ஜப்பான் மக்களியேயும் இவ்வழக்கம் காணப்பட்டது.

பச்சை குத்துதலானது அமெரிக்க தோலில் அக்கடமியால் ஐந்து வகைகளாக பிரித்தறியப்பட்டுள்ளது. அதாவது இயற்கையிலான முறையில் பச்சை குத்துதல் தொழில் முறை சார்பிலான பச்சை குத்துதல் குலம், கூட்டம் சமூகநிலை சமயம், நம்பிக்கை வீரம், காதல் வெளிப்பாடு, தண்டனைகளை குறித்துதல் பாதுகாப்பு அலங்காரம் அல்லது அழகியல் ரீதியிலான பச்சை குத்துதல் அடையாளப்படுத்துவதற்கான பச்சை குத்துதல் போன்ற அவையாகும்.

பச்சை குத்துதலானது பெரும்பாலும் அழகு சம்ந்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. அதாவது மச்சம் உள்ள இடங்களை மறைத்தல் உதடு மார்பகம் கண் இமை போன்ற இடங்களில் பெண்கள் பெரும்பாலும் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள்.

மேலும் மதகுருமார்கள் மற்றும் வைத்திய சிகிச்சை தொடர்பான பச்சையும் குத்தப்படுவதுண்டு.ஆரம்ப காலங்களில் மார்பு, கை, கால், முன்னங்கை, புயம் போன்ற இடங்களில் மட்டும் தான் குரவர் இனத்தவரால் இப்பச்சை குத்தப்பட்டது.

இப்பச்சை மஞ்சள்பொடி, அகத்திக்கீரை ஆகியவற்றை தீயிலிட்டு எரித்து கறியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கூர்மையான  ஊசியினால் தொட்டு தோலில் குத்தி தேவையான உருவங்களை வரைந்தனர். ஆனால் தற்பொழுது இரசாயனங்கள் கொண்டு தான் பச்சை குத்தப்படுகின்றது.

இப்பச்சை குத்தும் முறைகள் தொடர்பில் தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் வைத்திய கலாநிதி சிவப்பிர காசம் அனுஷ்யந்தனிடம் வினவிய போது அவர் கூறுகையில்,

பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டவராயின், நீங்கள் ஒரு மணி நேரத்தில் அழகான பச்சையைக் குத்திக் கொள்ளலாம். நீங்கள் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு முன்னர், ஒரு முறைக்கு இரு தடவைகள் யோசியுங்கள்.

இவ்விடயத்தில் உங்களை யாரும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ அனுமதிக்காததீர்கள். மதுவின் ஆளுகையில் உள்ள போது ஒரு போதும் பச்சை குத்திக் கொள்ளாதீர். உடலில் வெளிப்படையாக தெரியக்கூடிய இடத்திலா அல்லது ஆடைகளினுள் மறையக்கூடியதாகவா பச்சைக் குத்த விரும்புகிறீர்கள் என்பதையும் தீர்மானியுங்கள்.

கருத்தரித்தல் மற்றும் பிற காரணங்களால் உங்கள் உடல் நிறை அதிகரிக்கும் போது, வரைந்த உருவங்கள் மாறுபாடு அடைவதோடு சிதைவடையலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பச்சைக் குத்தும் செயல்முறையானது எளிதானதாக அமையாததோடு, உடலின் நிரந்தரமான தோற்றத்தைப் பற்றியும் சிந்திக்க மறக்க வேண்டாம்.

நீங்கள், பச்சைக்குத்திக் கொள்ளும் முன்னர் இது எவ்வாறு நடைபெறுகின்றது, யார் தொடர்புபட்டுள்ளார், அபாயங்களைக் குறைக்க எவ்வாறான பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள் .

பச்சைக் குத்தும் போது நடைபெறும் பொறி முறையானது, மனித உடலை மூடியுள்ள தோலின், மேல் அடுக்கினுள் பச்சை நிறமிகள் உள் நுழைக்கப்படுகின்றன.

பொதுவாக நீங்கள் வரைய விரும்பும் தோற்றத்தை இக்கலைஞர்கள் முதலில் உங்கள் உடலில் வரைவார்கள். அதன் பின்னர், பச்சைக் குத்தும் கலைஞர், வரைந்த உருவத்தின் மேல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊசிகளைக் கொண்டு, மீண்டும் மீண்டும் உங்கள் தோலினுல் பச்சை நிறமிகளை உட்செலுத்திக் கொண்டிருப்பார்கள்.

இது ஒரு கைத்தையல் இயந்திரம் போல செயல்படுகிறது. பச்சைக் குத்தும் இயந்திரம், ஒரு கையின் கட்டுப்பாட்டில் இயக்கிப் பயன்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் ஊசி தோலினுல் உட்செலுத்தப்படுகின்ற போது, துளை மூலம், ஊசிகள் சிறிய மைத்துளிகளை நுழைத்து விடுகின்றன.

பச்சைக் குத்துதல் என்பது மயக்க மருந்து கொடுக்கப்படாமலே செய்யப்படுகிறது. அத்தோடு, இது நடைபெறும் போது, குறிப்பிடத்தக்க வலி உணரப்படுவதோடு, ஒரு சிறிய இரத்தப் போக்கும் ஏற்படலாம். பச்சைக் குத்துவதால் ஏற்படக்கூடிய மருத்துவ ரீதியான பாதிப்புக்கள் என்று பார்த்தோமேயானால், மனித தோலினுல் பலவிதமான நிறமிகள் உட்செலுத்தப்படுவதால், தோல் நோய், தோல் அழற்சி மற்றும் பிற சிக்கல்கள் தோன்றுகின்றன.

ஒவ்வாமை – பச்சை சாயங்கள், குறிப்பாக சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறமான சாயங்களை தோலினுள் செலுத்தும் போது, பச்சை நிறமிகள் குவிக்கப்பட்ட தளத்தில் அரிப்புகள், தடிப்புகள் அல்லது தோல் தடிப்படைதல் போன்ற ஒவ்வாமை விளைவுகள், தோலின் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். இது, நீங்கள் பச்சைக் குத்திக் கொண்டவுடனும் அல்லது பல ஆண்டுகள் கழித்தும் கூட ஏற்படலாம்.

தோல் நோய்கள் – சில வகை தோல் நோய்கள், பச்சைக் குத்திய பிறகு தோன்றும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதாவது பூஞ்சை தொற்று, புற்றுநோய் போன்றவையும் ஏற்படலாம்.

பிற தோல் பிரச்சினைகள் சில நேரங்களில் Granulomas என்று அழைக்கப்படும் புடைப்புகள் அல்லது வீக்கங்கள், பச்சை மையைச் சுற்றி அமைந்து காணப்படலாம். பச்சைக் குத்திய இடங்களைச் சூழ மேலும் keloids எனப்படும் சார் இழையப் புடைப்புகளும் ஏற்படலாம்.

இரத்த மாதிரி அல்லது ஊசி மூலம் பரவக்கூடிய நோய்கள் உங்களுக்கு பச்சைக் குத்தப் பயன்படும் ஊசிகள், மற்றைய உபகரணங்கள் பாதிக்கப்பட்ட இரத்தத்தால் கிருமி தொற்றாதவை என்றால், உங்களுக்கு இரத்தத்தால் பரவக்கூடிய பல்வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

குறிப்பாக, எயிட்ஸ், காசநோய், கல்லீரல் அழற்சி, ஏற்புவலி, மஞ்சள்காமாலை B and C போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

பச்சை குத்திய இடத்தில் மை ஒவ்வாமையை அனுபவிக்க நேர்ந்தால் அல்லது நீங்கள் பச்சை குத்திய இடத்திற்கு அருகே ஒரு வகையான தொற்று நோய்கள் அல்லது இதர தோல் பிரச்சினை உருவாகின்றது என்றால் மருந்து வகைகள் அல்லது மற்ற சிகிச்சிசை ஆலோசனைகள் என்பன உடனே உங்களுக்கு தேவை என்பதை மறவாதீர்கள்.

பச்சை குத்தும் போது நீங்கள் பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது யார் இந்த பச்சை குத்தும் செயன்முறையை செய்கின்றார்கள் என்பது கட்டாயம் அவதானிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல ஒழுங்காக பயிற்சி கொடுக்கப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றார்களா? என்பதை பச்சைக் குத்தும் ஸ்டூடியோக்களுக்கு சென்று அரசாங்க தரக்கட்டுப்பாட்டு தேவைகள் மற்றும் உரிமைகள் என்பவற்றின் தரத்தை பரி’சோதித்து அறிதல் வேண்டும்.

உள்ளுர் சேவை வழங்குனர்களின் உரிமம் மற்றும் கட்டுபாடுகள் போன்ற தகவலுக்கு உங்கள் நகரம் மாவட்டம் அல்லது மாநில சுகாதாரத் துறையினரிடம் கேட்டு சரிப்பார்க்கவும்.

பச்சை குத்தும் கலைஞர்கள், கையுறைகள் அணிகின்றார்களா என்பைத உறுதிப்படுத்துங்கள். பச்சை குத்தும் கலைஞர்கள் தங்கள் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டு கழுவுவதோடு ஒவ்வொரு புதுச் செயல்முறைக்கும், ஒரு சோடி புதிய பாதுகாப்பு கையுறைகளை அணிந்துள்ளார்.

என்பதனை உறுதிபடுத்துங்கள். பச்சை குத்தும் கலைஞர் சரியான உபகரணங்கைளப் பயன்பத்கின்றார் என்பைத உறுதிப்படுத்துங்கள்.

பச்சை குத்தும் கலைஞர் சரியான உபகரணங்களை பயன்படுத்துகின்றார் என்பதனை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ஒவ்வொரு புதிய நடைமுறைகள் தொடங்கும் முன்னரும் பச்சை குத்தும் கலைஞர் சீல் வைக்கப்பட்ட தொகுப்புக்களினுள் இருந்து ஊசி மற்றும் குழாய்கள் மை போன்றவற்றை பெற்றுகொள்கின்றார் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

புதிதாக குத்திய பச்சையை எவ்வாறு பராமரிப்பது என்று பலருக்க தெரிவதில்லை அதனால் பலர் கிருமி தொற்றுக்கும் நோய் தொற்றுக்கும் ஆளாகுகின்றனர்.

புதிதாக குத்திய பச்சையின் தரமானது உங்கள் புதிய பச்சை குத்திய விதம், கலைஞர் செய்த வேலையின் தரம்  மற்றும் வகை போன்றவற்றில் சார்ந்திருக்கின்றது.

இருப்பினும் பொதுவாக நீங்கள் பின்வரும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரம் கழித்தே பச்சை குத்தும் போது அணிவிக்கப்பட்ட நீக்க வேண்டும். புதிய பச்சை குத்தல்களைக் குணப்படுத்தும் நோக்கில் தோலுக்குத் தேவையான கிருமி கொல்லி மருற்துகளை தடவலாம்.

பச்சை குத்திய தோலை தூய்மையாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் பென்மையான தொடுகை மூலம் தூய்மைப்படுத்தவும், நீச்சலடிப்பை தவிர்க்கவும்.

உங்கள் ஆடைகளைக் கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.  புதிதாக  குத்திய  பச்சையில் ஒட்டிக்கொள்ளும்  வகையில் ஆடைகள்  எதுவும் அணிய வேண்டாம்.

எப்போதும்  தளர்வான  ஆடைகளையே  அணியுங்கள்.  பச்சை  குத்திய  இடங்கள் ஆறி வருவதற்கு  2 வாரங்கள் வரை அனுமதிக்கலாம். காயத்தின்  மேலுள்ள  வடுக்களை  சுரண்டி  அகற்றமுற்படுகின்றபோது,கிருமித் தொற்று  ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கின்றது.

2 வாரங்களுக்குள்  காயங்கள் புரணமாகக்  காயாவிட்டால், வைத்திய ஆலோசனையைப்  பெற்றுக்கொள்வது  சாலச்சிறந்தது.

நீங்கள், உங்களுக்கு  குத்திய  பச்சையை  அகற்றுவதில்  ஆர்வம்  கொண் டிருந்தால், லேசர்  சிகிச்சை அல்லது  விசேடபச்சை அகற்றும் தொழில்நுட்பம்  பற்றிய அறிவையும்  பெற்றுக்கொள்ளுங்கள்.