பிரித்தானியாவில் விவாகரத்து கேட்ட மனைவியை கோடாரியால் 124 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Sonita Nijhawan (38), Sanjay Nijhawan (46) என்ற தம்பதி தெற்கு இங்கிலாந்தில், சர்ரே கவுண்டி பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் Sonita அவருடைய உறவினருக்கு சொந்தமான எஸ்டேட்டில் நீச்சல் குளம் ஒன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக அவரது கணவர் Sanjay Nijhawanயை பொலிசார் கைது செய்தனர். அவரும் தான் தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
இந்த கொலை தொடர்பான வழக்கு சர்ரே நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் தான் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் தான் தனது மனைவியை கொலை செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
ஆனால் அவர் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்துள்ளதை நீதிபதிகள் கண்டுபிடித்தனர்.
மனைவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அவருக்கு 124 இடங்களில் வெட்டுக் காயங்களும், 25 இடங்களில் கத்திக் குத்து காயங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவருடைய மனைவி தன்னுடைய கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான விவாதத்தின் போதே கொலை நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீதான கொலைக் குற்றம் சந்தேகமின்றி நிரூபணம் ஆனதால் அவருக்கு 9 ஆண்டுகள் 172 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.