குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் வரை அவர்களுக்கு தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியானதும் சிறிதளவு உணவுடன் பசும்பால் சேர்த்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.

ஏனெனில், இது சிறந்த ஊட்டச்சத்துகளுடன் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் என, குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்கள் பசும்பாலில் உள்ளன.

பசும் பாலில் எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் அதிகளவில் அடங்கியுள்ளன.

மேலும் குழந்தை வளர்வதற்கு தேவையான புரோட்டீன் பசும்பாலில் ஏராளமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உங்கள் குழந்தையை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான தேவையான கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளது.

ஆனால், அதிகளவு பசும்பாலினை குழந்தைக்கு கொடுப்பதும் நல்லதல்ல. சில சமயங்களில் ரத்தசோகை உண்டாக்கும். எனவே ஒரு நாளைக்கு 16 அவுன்ஸ் (2 கப்) என்ற அளவில் துவங்கி பின்னர் குழந்தைக்கு இரண்டு வயது நெருங்கும் போது படிப்படியாக 24 அவுன்ஸ் வரை அதிகரிக்கலாம்.