டைட்டானிக் கப்பல் கடந்த 1912ஆம் ஆண்டு தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் டைட்டானிக் போலவே மாதிரி கப்பல் ஒன்றை தயாரிக்க சீன நிறுவனம் ஒன்று முயற்சி எடுத்துள்ளது.
டைட்டானிக் கப்பல் போன்றே 300-மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலை கட்டமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த கப்பலின் பணிகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் அந்த சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த கப்பல் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் சிச்சுவான் மாகாணத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.