கண்ணிமைக்கும் நேரத்தில் கொல்லப்பட்ட தாய்! – (காணொளி இணைப்பு)

சிரியாவில் சிறுவன் ஒருவன் தனது தாயை சடலமாக கண்டு கதறி கதறி அழுத சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை உருக வைத்துள்ளது.

அலெப்போ நகரத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. Al Qubaவில் போராளிகள் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதி மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது தாயின் சடலத்தை கண்டு கதறி கதறி அழுகிறார்.

இதை மீட்புக்குழுவினர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து சிறுவன் கூறியதாவது, நாங்கள் ஒன்றாக பகுதியை விட்டு வெளியேறி கொண்டிருந்தோம்.

என் அம்மா சில பொருட்களை ஏந்தி வந்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தாக்குதல் சத்தம் கேட்டது. உடனே நான் ஓடி வந்து பார்த்த போது என் அம்மா இறந்து கிடந்தார் என கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் குறித்த பகுதியில் நடந்த தாக்குதலில் 739 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.