உலகிலேயே சிறந்த உறவு, மற்றவர்கள் சிறக்க வேண்டும் என எண்ணும் உறவு என பார்க்கப்படுவது தாய் தான். அதனால் தான் தாயை சிறந்ததோர் கோவிலுமில்லை என நம்பப்படுகிறது.
எந்த ஒரு தாயும் தனது மகனின் உயிருடன் விளையாடமாட்டால். ஆனால், அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் அரக்க குணம் கொண்டு, மகனின் மருத்துவ சிகிச்சை முன்னேற்றத்திற்காக என தனது மலத்தை மகனின் உடலுக்குள் புகுத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
லுகேமியா – இரத்த புற்றுநோய்!
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு லுகேமியா எனப்படும் இரத்த புற்றுநோய் பாதிப்பு உண்டாகி, ரிலே எனும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆகஸ்ட்டில் இருந்தே சிகிச்சை…
அந்த சிறுவனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து லுகேமியாவுக்கு சிகிச்சை பெற்றார். பிறகு மீண்டும் செப்டம்பர் மாதம் தீவிரமான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்று வாந்தி பிரச்சனையால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தாய் தான் காரணம்!
ஆனால், இந்த முறை சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவரது தாய் தான் காரணம். அந்த சிறுவனின் தாய் ஒரு ஆசிரியர். இவர் தனது மகனின் உடலுக்குள் தன் மலத்தை புகுத்தியதால் தான் சிறுவன் உயிருக்கு போராட வேண்டிய நிலை உண்டானது.
மருத்துவர்கள் குழப்பம்!
சிறுவனின் மருத்துவ அறிகுறிகள் வித்தியாசமாக இருந்தது. இது மருத்துவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. அப்போது தான் இரத்த பரிசோதனை செய்து பார்க்க மருத்துவர்கள் முனைந்தனர். அப்போது சிறுவனின் இரத்தத்தில் மலத்தை சேர்ந்த நுண்ணுயிர்கள் கலப்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு மருத்துவர்கள், சிறுவன் இருக்கும் மருத்துவமனை அறையில் கேமரா ஒன்று வைத்து பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
கொடூரமான செயல்!
கொடூரமான தாய் எதையோ, சிறுவனின் உடலுக்குள் பலமுறை இன்ஜெக்ட் செய்வது தெரியவந்தது. இது நவம்பர் 13 – 17 வரை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
தாய் கருத்து!
தாய் தான் தண்ணீரை தான் இன்ஜக்ட் மூலம் புகுத்தினேன் என கூறினார். ஆனால், பிறகு பகிரங்கமாக, சிறுவனின் மருத்துவமனை அறையில், ஒரு பை இருப்பதாகவும், அந்த பையில், தான் சேமித்து வைத்த தன்னுடைய மலம் இருப்பதாகவும். அதை தான் மகனின் உடலுக்குள் இன்ஜெக்ட் மூலம் புகுத்தியதாகவும் கூறியுள்ளார்.
காரணம் என்ன?
ரிலே மருத்துவமனையில் இருந்து இடம் மாற்றம் செய்து வேறு மருத்துவமனையில் சேர்க்கவே இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தனது மகனின் ஆரோக்கியம் அபாய நிலையை அடையும் என தெரிந்தும் ஒரு தாய் இப்படி செய்தது. உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.