எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சி கூட்டணியாகக் களமிறங்கும் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டணியில் இப்போதே 12 அரசியல் கட்சிகள் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து எமது கூட்டணியின் பலத்தைப் பெருக்குவோம். இன, மத, மொழி பேதமின்றி சகலரும் எங்கள் கூட்டணியில் இணையமுடியும்.
தொழிற்சங்கங்களின் உரிமைகளை வென்றெடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
இம்முறை வரவு செலவுத்திட்டம் ஏழைகளின் வயிற்றில் பலமாக அடித்திருக்கிறது.
வாகன தண்டத்தை 2,500 ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியதன் பிரதிபலனை இன்று இந்த அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரம் அடியோடு சரிந்து விட்டது. ஊழலும் இலஞ்சமும் தலை விரித்தாடுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் நாடு வெகு விரைவில் சுடுகாடாகிப்போய்விடும் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.