தனுஷ் மீண்டும் ஒரு பெண் இயக்குனருடன் இணைந்துள்ளார். இதில் நடிகனாக அல்ல. ஒரு பாடகராக. இப்போது தான் விஐபி 2 ல் தன் மச்சினிச்சி சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இந்நிலையில் கலா மாஸ்டரின் உறவினரும் நடிகையுமான பெண் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஒரு படம் இயக்கப்போகிறார்.
இந்த நடிகை யார் தெரிகிறதா? பிரபுதேவாவுடன் சும்மா சும்மா ஆடினார்…அவரே தான்…இவர் யாதுமாகின் நின்றாய் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தான் தனுஷ் ஒரு பாட்டு பாடி தந்திருக்கிறார்.
இதை காயத்ரி ரகுராமே மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவுக்கு கூட வரமுடியாத அளவு கோலிவுட்டின் ரொம்ப பிஸி தனுஷ்…பாட்டு பாட மட்டும் உடனே வந்துவிடுகிறார் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட்.