தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி – 1 கப்
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
மஞ்சள் – 2 துண்டு
உப்பு – அளவிற்கு
தண்ணீர் – 4 கப்
தேங்காய் துருவல் – கால் கப்
தாளிக்க :
சீரகம் – அரை ஸ்பூன்
நெய் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
செய்முறை :
* மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக அரைத்து எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலை பிழிந்தெடுத்து வைக்கவும்.
* சீரகம், மிளகு, மஞ்சள் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மஞ்சள் விழுதை தேங்காய் பாலில் கரைத்து வைக்கவும்.
* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசியை கழுவி போட்டு வேக விடவும்.
* அரிசி முக்கால் பதமாக வெந்த பின்பு, கரைத்து வைத்துள்ள தேங்காய் பால், அளவுக்கு உப்பு போட்டு மூடி வேகவிடவும்.
* கஞ்சி நன்றாக கொதித்து வெந்து வாசனை வரத் தொடங்கியதும் கறிவேப்பிலை, சீரகத்தை நெய்யில் தாளித்து அதில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி சூட்டுடனே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும்.