இலங்கைக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள்!

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தி 2004 சுனாமி காரணமாக அமைந்த இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அமைந்துள்ள பகுதி மேலும் பயங்கரமான பூமி அதிர்ச்சிகள் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

பூமியில் காணப்படும் மிகப் பெரிய பூமி பள்ளம் சுமத்ரா மற்றும் பண்டா ஆச்சே ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோனத்தன் பவ்னல் தெரிவித்துள்ளார்.

அந்த பள்ளம் பூமி மட்டத்தில் இருந்து 7 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்துள்ளது.

சுமத்ரா தீவுக்கு அருகில் கடலுக்குள் நூற்றுக்கணக்கான பூமி வெடிப்புகள் காணப்படுவதாக இந்த ஆய்வுக்கு உதவிய லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பூமி வெடிப்புகள் சுமத்ராவில் இருந்து 120 கிலோ மீற்றர் தூரம் வரை வியாப்பித்துள்ளன.

இதனடிப்படையில், 60 ஆயிரம் கிலோ மீற்றர் பகுதியில் காணப்படும் பூமி வெடிப்புகள் பிரதான பூமி தட்டில் இருந்து விலகி காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக சுமத்ரா பகுதியில் மேலும் பயங்கரமான பூமி அதிர்ச்சிகளுடன் சுனாமியும் ஏற்படலாம்.

மேற்கொள்ளப்பட்டு இந்த ஆய்வுகள் மூலம் பாரிய பூகம்பம் ஏற்பட்டு மிகப் பெரிய சுனாமி அலைகள் தோன்றுவதற்கு முன்னர் எச்சரிக்க விடுக்க கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சுமத்ரா தீவுக்கு அருகில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட 8.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் காரணமாக தெற்கிழக்காசியவில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் காணாமலும் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் சில சில இடங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என வானிலை அவதானிகள் கூறுகின்னறனர்.

மக்கள் அவதானமாக இருப்பதுடன் கடல் மற்றும் நீர் அதிகமாக உள்ள பகுதிகளைத் தவிர்ப்பது நல்லது எனக் கூறப்படு்டுள்ளது.