எமது நாட்டு அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடம் பாடம் பயிலவேண்டும்!

நாட்டில் இன்று பிடல் கஸ்ட்­ரோக்கள் உரு­வா­க­வில்லை. மாறாக “பரிஸ்­டாக்களே” உரு­வா­கின்­றனர் எனக் குற்­றஞ்­சாட்­டிய ஜனாதிபதி மைத்திரி­பால சிறி­சேன, ஜனாதிபதி மாளி­கையில் முதன் முத­லாக கஸ்ட்­ரோவை நினை­வு­கூர்வது அவ­ருக்கு வழங்கும் உய­ரிய கெள­ர­வ­மாகும் என்றும் தெரி­வித்தார்.

“நினை­வு­ கூ­ர­லுக்­கான அழைப்பு” என்ற தொனிப்­பொ­ருளில் மறைந்த முன்னாள் கியூபத் தலைவர் பிடல் கஸ்ட்ரோவின் ஞாப­கார்த்த நினைவு தினம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்­றது.

இந்­நி­கழ்வில் பிரம அதிதி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட­வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய ஜனாதிபதி மைத்திரி­பால சிறி­சேன,

“கியூ­பாவின் புரட்­சிப்­புயல், யுகப்­பு­ருஷர் பிடல் கஸ்ட்­ரோ­. கியூபப் புரட்சி மூலம் உலகம் அர­சி­யலைப் பயில வேண்டும்.

அங்கு சம அந்தஸ்து ஜன­நா­யக சுதந்தி­ரத்தை பெற்­றுக்­கொ­டுப்­பற்­காக தனது இறுதி மூச்­சு­வரை பாடு­பட்டார். இறுதி வரை போரா­டினார்.

உலகில் இன்று கஸ்ட்­ரோக்கள் உரு­வா­கவில்லை. மாறாக பரிஸ்­டாக்­களே உரு­வா­கின்­றனர். லெனின்கள் உரு­வா­க­வில்லை. லெனினின் கொள்­கைக்கு எதி­ரா­ன­வர்­களே தலைதூக்­கு­கின்­றனர்.

கஸ்ட்­ரோவின் சுய­ச­ரிதை நமக்கு நல்­லொரு பாட­மாகும். எமது அர­சி­யல்­வாதிகள் இதி­லி­ருந்து பாடம் பயில வேண்டும்.

அந்த நாட்டில் பல அர­சியல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தினார். நீண்ட காலமாக அர­சியல் புரட்­சியை மேற்­கொண்ட நல்ல பல பாடங்­களை உல­கிற்கு காண்­பித்தார்.

எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­காகவே எனது அர­சியல் குரு­வாவார். அந்த குரு­வா­ன­வரே கியூபப் புரட்சி ஏற்­பட்டு 48 மணித்தியா லங்­க­ளுக்கு பிடல் கஸ்ட்­ரோவை கியூபத் தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்டார்.

அவ்­வா­றான சிறப்­பான அர­சியல் பாரம்­ப­ரி­யத்தில் வளர்ந்தவன் நான். இது­வரை காலமும் மறைந்த உலகத் தலை­வர்­களின் ஞாப­கார்த்த நிகழ்­வுகள் ஜனாதி­பதி மாளி­கையில் நடத்தப்பட்­டில்லை.

இவ்­வா­றா­னொரு நிலை­மை­யி­லேயே பிடல் கஸ்ட்­ரோவின் நினைவு தினத்தை ஞாப­கார்த்த நிகழ்வை ஜனாதிபதி மாளிகையில் நடத்த தீர்­மா­னித்தேன்.

ஜனாதிபதி மாளி­கையில் இந்­நி­கழ்வை நடத்துவதன் மூலம் காஸ்ட்­ரோ­வுக்கு உய­ரிய கெள­ர­வத்தை வழங்கியுள்ளேன்.

முதல் முறை­யாக இவ்­வா­றான ஒரு நிகழ்ச்சி ஜனாதிபதி மாளி­கையில் இடம்­பெ­று­கின்­றது என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், விசேட பிரமுகர்கள் என பலரும் இலங்கைக்கான கியூப தூதுவர் உட்பட அதிகாரிகளும் தூதரகங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.