பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படக் கூடிய மாதவிடாய் தாமதமாக ஏற்பட்டாலோ அல்லது தடைப்பட்டு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது மிகவும் நல்லது.
மாதவிடாய் தாமதமாக ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன் சரியாக தூண்டப்படாமல் இருப்பதும், ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதுமே காரணமாகும்.
இந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்கு மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை மூலிகைகள் நிறைய உள்ளது.
தேவையான பொருட்கள்
- மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
- கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்
- சீரகம் – 1ஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 4 பல்
- வெங்காயம் – 3
- வெற்றிலை – 2
- மிளகு – அரை ஸ்பூன்
செய்முறை
மணத்தக்காளி, வெங்காயம், மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் தேவையான அளவு நீரில் அனைத்தையும் போட்டு, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் 20 நிமிடம் கழித்து ஆற வைத்து வடிகட்டி சூப் போல செய்து குடிக்க வேண்டும்.
இந்த சூப்பை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகள் சாப்பிட்ட பின்பு அல்லது முன்பு குடிக்கலாம்.
மேலும் மாதவிடாய் நெருங்கும் போது 10 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
பின் இதே போல் மூன்று மாதங்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். இந்த இயற்கையான மூலிகை சூப்பை அனைத்து பெண்களும் பருகலாம்.
இதனால் அவர்களின் உடல் வலம் மற்றும் கர்ப்பப்பை வலிமை அடைந்து, ரத்த சுத்தகரிப்பு, நல்ல நினைவாற்றல் போன்றவை அதிகரிக்கும்.