13-ம் எண் பயமா? பலமா?

சூரியனின் ஆதிக்கமும், குருவின் ஆதிக்கமும் இணைந்த எண் தான் பதிமூன்று. வெளிநாடுகளில் உள்ள பெரிய ஓட்டல்களில் எல்லாம் 12 என்ற எண் உள்ள அறைக்கு அடுத்து, 13 என்று எழுதாமல் 12 ‘ஏ’ என்று எழுதியிருப்பதாகச் சொல்வார்கள். 13 என்பது பயத்தை தரும் எண் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல…

ஜாதகத்தில் குரு, சூரியனைப் பார்க்கும் விதத்தில் இருந்தால், அவர்களுக்கு 13 என்ற எண் மிகுந்த யோக எண்ணாகும். வீட்டு எண், கடை எண், கல்யாண நாள், முக்கியச் சம்பவங்கள் நடைபெறும் தினங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால், 13 என்ற எண் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

அல்லது ராகுவின் ஆதிக்க எண்ணான 4, 13, 22, 31 ஆகிய எண்கள் வந்து கொண்டேயிருக்கும். ‘ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்ற ராமநாமம் 13 எழுத்தில் உள்ளது. அதை உச்சரித்தால் நமக்கு அற்புதமான பலன் கிடைக்கிறதல்லவா? எனவே பயம் தருவதல்ல 13 என்ற எண். பலன் தரும் எண் என்பதை மனதில் கொள்வோம்.