டாக்ஸி புக் செய்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!!.. வைரலாகும் வீடியோ!!…

கொச்சி பகுதியில் உபேர் கால் டாக்ஸியை புக் செய்த பெண்ணை அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு பயணிப்பதற்காக வித்யா என்ற பெண் உபேர் கால் டாக்ஸியை புக் செய்துள்ளார்.

அவர் டாக்சியில் ஏறியதை கண்ட ரயில்நிலைய ஆட்டோ டிரைவர்கள், அவர் புக் செய்த டாக்ஸியை மறித்து, அதில் பயணிக்க கூடாது, ஆட்டோ அல்லது, ரயில் நிலையத்தில் உள்ல டாக்ஸியில் பயணிக்குமாறு மிரட்டுயுள்ளனர்.

இதை வீடியோவாக பதிவு செய்த வித்யா, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ , பலர் இந்த வீடியோவை ஷேர் செய்தும், இதேபோன்ற அவர்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டும் வித்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.