நம் நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்களைப் பலரும் அதன் உண்மை காரணம் தெரியாமலே பின்பற்றி வருகின்றனர். நமது முன்னோர் சொல்லிப் போன பல்வேறு பழக்கவழக்கங்களுக்குப் பின்பும் மறைமுக அர்த்தம் இருக்கும். அது நிச்சயம் நமக்கு நன்மை தரும் ஒன்றாகவே இருக்கும்.
இன்றளவும் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் மொட்டை போட வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரியும். தெய்வ நம்பிக்கை கொண்டு வேண்டுதல், நேர்த்திக்கடன் எனப் பல்வேறு காரணங்களுக்காக இதை நாம் பின்பற்றி வருகிறோம்.
ஆனால் பிறந்த குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவதற்குப் பின் அறிவியல் காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை இங்குப் பார்ப்போமா.? பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை பொதுவாக இரத்தம் நிறைந்த சூழலில் தான் இருக்கும்.
சாதாரணமாகக் கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
உடலினுள் சேரும் கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
ஒருவேளை மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்திப் பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்குக் காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான். நம்மவர்களிடம் அறிவியல் ரீதியாகச் சொல்வதை விட, ஆன்மீக ரீதியாகச் சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர்.