‘ராஜா ராணி’ வெற்றிக்குப்பிறகு விஜய் நடித்த ‘தெறி’ படத்தை அட்லி இயக்கினார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். இதற்கான பணிகளில் அட்லி தீவிரமாகி இருக்கிறார்.
தற்போது விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி நிறைவு பெற்றது. அடுத்து விஜய்-அட்லி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கதாநாயகி யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் 60-வது படமாக உருவாகி இருக்கும் ‘பைரவா’ 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் பரதன் இயக்கியிருக்கிறார்.