தமது ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் இன்று(03) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியளார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் மற்றும்பிரதிநிதிகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் இராச்சியத்தை நோக்கி படிப்படியாக செல்வதை இதனூடாக மிகத் தெளிவாககாணமுடிவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.