இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தற்போது இந்தியா வந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறது. ஆனால் முடிவுகள் பரிதாபமாக உள்ளது. இதனால் சச்சினை கடத்தி கொண்டு போய் இங்கிலாந்து அணிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சச்சின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது