வலுவிழந்த பிள்ளைகள் குறித்து மைத்திரியின் புது கொள்கை!

வலுவிழந்த பிள்ளைகளுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமைப்பதற்கும் வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச பிரமாணங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தேவையான நிறுவன மற்றும் சட்டப் பின்புலத்தை அமைக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.

வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை தேசிய கல்வி விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார். வலு விழந்தவர்கள் ஏனையவர்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வலுவிழந்தவர்களும் அவ்வாறு அல்லாத சாதாரண பிரஜைகளும் சம உரிமை மற்றும் சலுகைகளுடன் சமூகத்தில் வாழவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வலுவிழந்தவர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான பின்புலத்தை அமைத்துக்கொடுக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

‘நாம் விரும்பும் எதிர்காலத்திற்காக பதினேழு இலக்குகளை அடைந்துகொள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் சமூக வலுவூட்டல், நலன்பேணல் அமைச்சும் வலுவிழந்தவர்களுக்கான தேசிய பேரவையும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் வலுவிழந்தவர்கள் தொடர்பான விடயங்களை விளங்கிக்கொள்ளுதல், வலு விழந்தவர்களின் உரிமைகள் மற்றும் நலன் பேணலுக்காக அனுசரணையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகி்ன்றமை.