நம்­பிக்­கை­ வீணடிக்கப்படுமா? – செ. சிறிதரன்

இனப்­பி­ரச்­சி­னைக்கு எத்­த ­கைய தீர்வு காணப்­படும் என்­பது தெளி­வில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்­களை வீழ்த்­து­கின்ற தந்­தி­ரோ­பாய ரீதியில் அர­சாங்கம் செயற்­பட முற்­பட்­டி­ருக் ­கின்­றதோ என்ற சந்­தே­கமும் எழுந்­தி­ருக்­கின்­றது.

ஏதோ ஒரு வகையில் – இராஜ­தந்­திர வியூ­கங்­களின் மூலம் அர­சியல் ரீதி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து, தான் விரும்­பு­கின்ற முறையில் ஓர் அர­சியல் தீர்வை வழங்கி இனப் ­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கண்­டு­ வி­டலாம் என்ற போக்கில் அர­சாங்கம் செயற்­பட முற்­பட்­டி­ருப் பதை உணரமுடி­கின்­றது.

நாட்டில் உறு­தி­யான அர­சியல் போக்கை ஏற்­ப­டுத்தி சமா­தா­னத்­தையும், ஐக்­கி­யத்­தையும் நிலை­
நி­று­வனத்­து­வ­தற்­கான முயற்­சி­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆயினும் இந்த முயற்­சி­களின் இரண்டு முக்­கிய விட­யங்­களில் சிக்­கல்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தச் சிக்­கல்­க­ளுக்கு எந்த வகையில் முடி­வேற்­படும் என்­பது தெரி­ய­வில்லை.

அதனை அனு­மா­னிப்­பது, இன்­றைய சூழலில் கடி­ன­மான காரி­ய­மாகத் தோன்­று­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் உறு­தி­யான அர­சியல் போக்­கிற்­கான அடித்­த­ளத்தை இட முடியும் என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நம்­பிக்­கை­யாகும்.

அதே­வேளை, சமா­தா­னத்­தையும் ஐக்­கி­யத்­தையும் நிலை­நி­றுத்­து­வ­தற்கு நாட்டு மக்­க­ளி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம். பல்­லினம், பல மதங்­களைப் பின்­பற்றும் மக்கள் வாழும் நாட்டில் புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டை­யி­லேயே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­ப­தையும் அவர் உணர்ந்து, அதற்­கேற்ற வகையில் காரி­யங்­களை முன்­னெ­டுத்­துள்ளார்.

முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்தம், இன ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் மக்­களைப் பிள­வு­ப­டுத்தி, ஒரு­வரையொருவர் தீராத சந்­தே­கத்­துடன் நோக்­கு­கின்ற மோச­மான நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. இத்­த­கைய சந்­தே­க­மான மனப்­போக்கை இல்­லாமற் செய்து, நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வையும் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது சாதா­ரண காரிய­மல்ல.

அது மிகவும் கடி­ன­மான காரி­ய­மாகும் என்­ப­தையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கின்றார். இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கமும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் கைங்­கர்­யமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு

உறு­தி­யான அர­சியல் போக்கு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு நடை­மு­றையில் உள்ள நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையில் மாற்றம் கொண்டு வர­வேண்டும். அதற்கு உறு­து­ணை­யாக தற்­போ­துள்ள விகி­தா­சார தேர்தல் முறையை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற இரண்டு முக்­கிய நோக்­கங்­களைக் கொண்­ட­தா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஆதா­ர­மாகக் கொண்டு எதேச்­ச­தி­காரப் போக்கில் பய­ணித்த முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தைப் பத­வியில் இருந்து இறக்கி, நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்குத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உறு­து­ணை­யாக இருந்­தது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் நிபந்­த­னை­யற்ற அர­சியல் ஆத­ரவின் கார­ண­மா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்க முடிந்­தது என்­பதை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் அடிக்­கடி சுட்­டிக்­காட்டி வரு­கின்­றார்கள். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையில் தமிழ் மக்கள் அளித்த பேரா­த­ரவு கார­ண­மா­கவே நாட்டில் ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வர முடிந்­தது என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

அது மட்­டு­மல்­லாமல், தனக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளுக்கு நன்­றி­யு­டை­ய­வ­னாக இருந்து செயற்­ப­டுவேன் என்ற உறு­தி­யையும் அவர் பகி­ரங்­க­மாக வழங்­கி­யுள்ளார். நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­குவ­தற்­கான முயற்­சி­க­ளின்­போது, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும் என்ற தனது கோரிக்­கையை ஏற்று, நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்கள் ஒப்­புதல் அளித்­தி­ருந்­தார்கள் என்று திரு­கோ­ண­ம­லையில் இன்­றைய அர­சியல் நிலைப்­பாடு தொடர்­பாக விளக்கிக் கூறிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­ன ஆர்.சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எனவே, கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் வேண்­டு­கோளை ஏற்று புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் மூன்­றா­வது அம்­ச­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணும் விடயம் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது.

எனவே, ஜனா­தி­பதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை என்ற இரண்டு விட­யங்­களில் மாற்றம் கொண்டு வரு­வ­தற்­காக, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முனைந்­தி­ருந்த பெரும்­பான்மை இன அர­சியல் தலை­வர்கள், தங்­க­ளோடு இணைந்து ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்கு ஒத்­து­ழைத்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கோரிக்­கைக்­கா­கவே இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் விட­யத்­தையும், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்ற நோக்­கங்­களில் ஒன்­றாகச் சேர்த்துக் கொண்­டார்கள் என்­பதைப் புரிந்து கொள்ள முடி­கின்­றது.

முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த போதிலும், யுத்தம் ஒன்று மூள்­வ­தற்குக் கார­ண­மாக இருந்த இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னைய அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வில்லை. இதன் கார­ண­மா­கவும் நல்­லாட்சி அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்­டிய பொறுப்­புக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றது.

நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­குதல்

அது மட்­டு­மல்­லாமல், யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த முன்­னைய அர­சாங்கம் நாட்டில் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் பய­னுள்ள வகையில் முன்­னெ­டுக்கத் தவ­றி­யி­ருந்­தது. இதனால், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற பொறுப்­பையும் நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்க வேண்­டி­ய­தா­யிற்று.

நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­குதல் என்­பது இனங்­க­ளுக்­கி­டையில் நல்ல உறவை ஏற்­ப­டுத்­து­வது என்­ப­துடன் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தல்ல. உண்­மையில், யுத்த மோதல்­களின் போது இழைக்­கப்­பட்ட உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற கட­மை­யை அது மையப் பொரு­ளாகக் கொண்­டி­ருக்­கின்­றது.

இறுதி யுத்த மோதல்­க­ளின்­போது இழைக்­கப்­பட்ட அநீ­திகள், உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட வேண்டும் என்ற சர்­வ­தே­சத்தின் கோரிக்­கையை, முன்­னைய அர­சாங்கம் விடாப்­பி­டி­யாகத் தட்டிக் கழித்து வந்­தது.

இதனால் இலங்கை மீது சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்கள் அழுங்குப் பிடி­யாகத் தொடர்ந்­தன. இந்த வகை­யி­லேயே ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அடுத்­த­டுத்து இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைகள் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தன. இந்தப் பிரே­ர­ணை­களின் பின்­ன­ணியில் அமெ­ரிக்கா முழு­மூச்­சாகச் செயற்­பட்­டி­ருந்­ததை அனை­வரும் அறிவர்.

மனித உரிமை, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் என்­ப­வற்றை மீறி­ய­மைக்­காக பொறுப்பு கூறு­வ­தற்குத் தவ­றி­யது மட்­டு­மல்­லாமல், ஜன­நா­ய­கத்­தையே குழி­தோண்டிப் புதைக்கும் வகையில் செயற்­பட்டுக் கொண்டு, சீன சார்பு கொள்­கை­களை முன்­னெ­டுத்­த­மைக்­காக இலங்­கையில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதில் அமெ­ரிக்கா, இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடுகள் நாட்டம் கொண்­டி­ருந்­தன.

என­வேதான், சர்­வ­தே­சத்தின் இரா­ஜ­தந்­திர ஆத­ரவும் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்­தது என்று அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றார்கள்.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­ற­வுடன், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராகப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது அதற்கு இணை அனு­ச­ரணை வழங்கி, அந்தப் பிரே­ர­ணையில் சொல்­லப்­பட்­ட­வற்றை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தது.

இந்த வகை­யி­லேயே, நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற உரிமை மீறல் விட­யங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­கின்ற பொறுப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் வலிந்து ஏற்றுக் கொள்ள நேர்ந்­தது.

இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே, புதிய அர­சி­ய­ல­மைப்­பையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்கும் முயற்­சிகள் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

இப்­போ­தைய சிக்­கல்கள் என்ன?

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் பல்­வேறு விட­யங்கள் பேசப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவற்றில் பல விட­யங்­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், பல விட­யங்­களில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், பல விட­யங்கள் இன்னும் பேசப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­ன ஆர்.சம்­பந்தன் திரு­கோ­ண­ம­லையில் சம­கால அர­சியல் நிலை­மைகள் குறித்து தெளி­வு­ப­டுத்­து­கையில் கூறி­யி­ருக்­கின்றார்.

அதே­வேளை, இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் நம்­பிக்கை தரு­கின்ற நன்­மை­யான மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். ஆயினும், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து இன்னும் முடி­வேற்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் முஸ்லிம் தரப்­புக்­க­ளுடன் இன்னும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இணைப்பின் மூலம் தமது அர­சியல் நலன்கள் பாதிக்­கப்­பட்­டு­விடும் என்ற அச்சம் கார­ண­மாக வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­படக் கூடாது என்­பதில் முஸ்­லிம்கள் உறு­தி­யாக இருப்­பதைக் காண முடி­கின்­றது.

இது விட­யத்தில் முஸ்லிம் தரப்­புக்­க­ளுடன் பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும், இன்னும் பேச்­சுக்கள் நடத்­தப்­ப­ட­வேண்டி உள்­ள­தா­க­வும்­கூட சம்­பந்தன் கூறி­யி­ருக்­கின்றார். இருப்­பினும் 2016 ஆம் ஆண்டு இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று கூறி­ய­வாறு அதற்­கான சூழல் கனிந்து காரி­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நேரத்தில் காரி­யங்­களைக் குழப்­பாமல் கவ­ன­மாகச் செயற்­பட வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும், அதே கருத்தை ஜனா­தி­ப­தியும் கொண்டு செயற்­பட்டு வரு­வ­தா­கவும் கூட அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் விட­யத்தில் நம்­பிக்கை ஊட்­டு­கின்ற வகையில் காரி­யங்கள் நகர்ந்து கொண்­டி­ருப்­ப­தா­கவே ஊட­கங்கள் அவ­ரு­டைய கருத்தை வெளிப்படுத்­து­வ­தற்கு முயன்­றி­ருக்­கின்­றன. இருந்த போதிலும், அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் தள்­ளாடி, தள்­ளாடி பாதி­வ­ழியை எட்­டிப்­பி­டிக்க முனைந்து கொண்­டி­ருப்­ப­தையே அவ­ரு­டைய கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களில் இது­வ­ரையில் எட்­டப்­பட்­டுள்ள நிலை­மை­களும் இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. ஐக்­கிய இலங்­கைக்குள் ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதில் அரச தரப்­பினர் உறு­தி­யாக இருப்­பது போலவே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் உறு­தி­யாக இருக்­கின்­றது. ஆயினும் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட ஓர் ஐக்­கிய இலங்கை என்­பதே கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டாகும்.

இருப்­பினும் மத்­தியில் அதி­கா­ரங்கள் குவிக்­கப்­பட்ட ஒற்­றை­யாட்­சியைக் கொண்ட ஐக்­கிய இலங்­கை­யையே பெரும்­பான்மை இன அர­சியல் தரப்­புக்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ், முஸ்லிம் மக்­களின் தாயகப் பிர­தே­ச­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற வடக்­கையும் கிழக்­கையும் இணைத்தால், தமிழ் அர­சி­யல்­வா­திகள் அந்தப் பிர­தே­சத்தைத் தனி­நா­டாக்கிக் கொள்­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்­த­தாக முடிந்­து­விடும் என்ற அச்சம் பெரும்­பான்மை இன அர­சியல் தரப்­பி­ன­ரிடம் காணப்­ப­டு­கின்­றது.

அத்­த­கைய நிலைமை ஏற்­பட்­டு­வி­டாமல் தடுக்க வேண்டும் என்­ப­தற்­காக திட்­ட­மிட்ட வகையில் இரண்டு மாகா­ணங்­க­ளையும் பிரிப்­ப­தற்­காக சிங்­களக் குடி­யேற்­றங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த வகையில் மகா­வலி அபி­வி­ருத்தித் திட்டம் என்ற பாரிய விவ­சாய அபி­வி­ருத்தித் திட்­டத்தின் செயற்­பாடும், கல்­லோயா குடி­யேற்றத் திட்­டமும் முக்­கி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த வகையில், அநு­ரா­த­புரம், திரு­கோ­ண­மலை, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களின் எல்­லை­களில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள வெலி­ஓயா சிங்­களக் குடி­யேற்றத் திட்­டமும் முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­யாகும். இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான், வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்ட ஒரு மாநி­லத்தில் சமஷ்டி முறை­யி­லான அதி­காரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கோரி வரு­கின்­றது.

இந்தப் பிர­தே­சத்தில் இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்­கென தனி அலகு இந்தப் பிராந்­தி­யத்தில் உரு­வாக்­கப்­ப­டலாம் என்றும் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி வரு­கின்­றது. வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க முடி­யாது. சமஷ்டி முறை­மைக்கும் நாங்கள் இணங்­க­மாட்டோம் என்று அரச தரப்­பினர் பிடி­வா­த­மாக உள்­ளனர். இந்த நிலையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் வடக்கு கிழக்கு இணைந்த, பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மை­யுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறை எந்த அள­வுக்கு சாத்­தியம் என்­பது தெரி­ய­வில்லை.

ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்கள்

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்ற அதே­வேளை, பொறுப்புக் கூறும் விட­யத்தைக் கைக­ழு­வி­விடும் நோக்­கத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு அர­சாங்கம் முனைந்­தி­ருக்­கின்ற ஒரு போக்கு வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு எத்­த­கைய தீர்வு காணப்­படும் என்­பது தெளி­வில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்­களை வீழ்த்­து­கின்ற தந்­தி­ரோ­பாய ரீதியில் அர­சாங்கம் செயற்­பட முற்­பட்­டி­ருக்­கின்­றதோ என்ற சந்­தே­கமும் எழுந்­தி­ருக்­கின்­றது.

ஏதோ ஒரு வகையில் – இரா­ஜ­தந்­திர வியூ­கங்­களின் மூலம் அர­சியல் ரீதி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து, தான் விரும்­பு­கின்ற முறையில் ஓர் அர­சியல் தீர்வை வழங்கி இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கண்­டு­வி­டலாம் என்ற போக்கில் அர­சாங்கம் செயற்­பட முற்­பட்­டி­ருப்­பதை உணர முடி­கின்­றது.

இந்தத் தீர்­வா­னது, முன்­னைய அர­சாங்­கங்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டாத அள­வுக்கு முன்­னேற்­ற­க­ர­மான ஒரு தீர்­வாக இருக்­கலாம். அந்த விட­யத்தில் அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்தும் என்று நிச்­ச­ய­மாக நம்­பலாம். அந்த வகை­யி­லேயே அர­சாங்­கத்தின் நகர்­வுகள் கோடி காட்­டு­கின்­றன.

எனவே, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதன் மூலம் தமிழ் மக்­களின் நல்­லெண்­ணத்தை எப்­ப­டி­யா­வது சம்­பா­தித்­து­வி­டலாம். அதன் ஊடாக நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்­கி­விட முடியும் என்ற அர­சியல் ரீதி­யான நப்­பா­சை­யையும் அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்­றதோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது.

இதற்குக் காரணம் இல்­லாமல் இல்லை. தென்­னி­லங்­கையில் வைபவம் ஒன்றில் உரை­யாற்­றி­ய­போது யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த இரா­ணு­வத்­தி­ன­ரையும், யுத்­தத்தை நடத்­திய அர­சியல் தலை­வர்­க­ளையும் சர்­வ­தேச யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து தானே மீட்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சர்­வ­தேச நாடுகள் பல­வற்­றுக்குச் சென்று நிலை­மை­களை எடுத்துக் கூறி யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களைக் கைவி­டு­மாறு கோரி­யி­ருப்­ப­தா­கவும், அதனை அவர்கள் ஏற்­றுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அது மட்­டு­மல்­லாமல், அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்­பிடம் அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரிமை பேர­வையில் கொண்டு வந்­துள்ள இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையைக் கைவி­டு­மாறு கோரி கடிதம் எழு­த­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் அதே­வேளை, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பொறுப்பு கூறுல் நட­வ­டிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்து, ஐ.நா.

மனித உரிமைப் பேர­வையின் 2015 ஆம் ஆண்டின் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே, பொறுப்பு கூறல் விட­யத்தை அமெ­ரிக்கா கைவிடச் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­டப்­போ­வ­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கின்றார். இவ்­வாறு அவர் செயற்­பட முற்­பட்­டி­ருப்­ப­தா­னது, பொறுப்பு கூறும் விட­யத்தில் இலங்கை சிக்­க­லான ஒரு நிலை­மைக்கு உள்­ளாகி­யி­ருப்­ப­தையே சுட்­டிக்­காட்­டு­கின்­றது என்று இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

ஐ.நா.மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சர்­வ­தேச மட்­டத்­தி­லான ஒரு பிரே­ரணை தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்­சரே கடிதம் எழு­தவோ கோரிக்கை விடுக்­கவோ வேண்டும் என்றும், அதுவே இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்கை என்றும் அவர்கள் கூறி­யுள்­ளனர்.

இந்த நடை­மு­றைக்கு மாறாக ஜனா­தி­பதி அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்குக் கடிதம் எழு­து­வதோ அல்­லது அது தொடர்பில் உரை­யா­டு­வதோ முறை­யற்ற ஒரு நட­வ­டிக்­கை­யாகும் என்றும் இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

பொறுப்பு கூறல் பிசு­பி­சுத்­து­வி­டுமா?

பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்து இணை அனு­ச­ரணை வழங்­கிய ஒரு பிரே­ர­ணையை விலக்கிக் கொள்­ளு­மாறு கோரு­வ­தற்கு முற்­பட்­டுள்ள ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டா­னது, பொறுப்பு கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் அர­சியல் ரீதி­யான சிக்­கல்­களில் சிக்­கி­யி­ருப்­ப­தையே காட்­டு­கின்­றது என்றும் அந்த இரா­ஜ­தந்­திர வட்டாரங்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றன.

மறு­பு­றத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய பொறுப்பு கூறல் விட­யங்­களை இலங்கை அர­சாங்கம் அம்போ என கைவிடப் போவ­தற்­கான அறி­கு­றி­யா­கவும் இதனை நோக்கவேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணைக்கு அமை­வாக நிலை­மா­று­கால நீதிக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அர­சாங்கம் அது தொடர்­பி­லான பொறி­மு­றை­களை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யி­ருக்­கின்­றது. அந்த வகையில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அடுத்­த­டுத்து, விசா­ரணை பொறி­முறை, மீள் நிக­ழா­மைக்­கான பொறி­முறை போன்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலை­யி­லேயே ஜனா­தி­பதி பொறுப்பு கூறல் விட­யத்­தையே கைவிடக் கோரும் கோரிக்­கையை அமெ­ரிக்­காவின் புதிய அதி­ப­ரிடம் முன்­வைக்கப் போவ­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த நட­வ­டிக்கை மிகவும் பார­தூ­ர­மா­ன­தா­கவே இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களில் நோக்­கப்­ப­டு­கின்­றது. இந்தப் பின்­ன­ணியில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யிட்­டுள்ள காட்­ட­மான கருத்தும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.

புதிய அசி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் வழங்­கப்­ப­டு­கின்ற ஆத­ரவை, யுத்­தத்தின் விளை­வுடன் சம்­பந்­தப்­பட்ட ஏனைய விட­யங்­களை நிறை­வேற்­றாமல் தட்­டிக்­க­ழித்­து­வி­டு­வ­தற்கு சாத­க­மாக அரசு பயன்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டாது என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­யதன் பின்னர், யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்ற உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தை அரசங்கம் கைகழுவிவிடப் பார்க்கின்றது என்பதையே சுமந்திரன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல், நாட்டில் நல்லிணக்கம், அமைதி, சமாதானம், ஐக்கியம் என்பன நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளற்ற வகையில் விட்டுக்கொடுப்புடன் நல்லாட்சி அரசாங்கத்துடன் செயற்பட்டு வருகின்றது.

அவ்வாறு தாங்கள் செயற்படுவதை தமிழர் தரப்பின் பலவீனமாகவோ அல்லது இயலாமையாகவோ அரச தரப்பினர் கருதிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்திருப்பதையே காண முடிகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், முக்கியமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகிய தனிப்பட்ட நபர்களாகிய அரசியல் தலைவர்கள் மீதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வைத்துச் செயற்பட்டு வருகின்றது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலான அரசியல் செயற்பாட்டை, தென்பகுதியில் உள்ள கடும் போக்காளர்களும், இனவாத மதவாத அரசியல் தீவிரவாதிகளும் தமிழர்களுக்கு எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்து விடப் போகின்றார்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றார்கள்.

அதற்காக வரையறையற்ற வகையில் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு நிலைமை யைக் குட்டிச் சுவராக்குவதற்கான முயற்சி களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அத்தகைய எதிர்ப்பு நிலைப்பாட்டை முறியடித்து முன்னேறிச் செல்ல வேண்டிய அரசாங்கத் தரப்பினர் – குறிப்பாக ஜனாதிபதி குறுக்கு வழியில் செல்ல முற்படுகின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட முற்பட்டிருப்பது நல்லதாகத் தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு கூறல் செயற்பாட்டை முன்னெடுப் பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதையே இந்த நிலைமைகள் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் 2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு எட்டப்படும் என்று கொண்டிருக்கின்ற நம்பிக்கையையும், அவர் தமிழ் மக்களுக்கு இது தொடர்பில் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பையும் இந்த சிக்கல்கள் சீர்குலைத்துவிடக் கூடாது. அத்தகைய ஒரு நிலைமை உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்த நல்லாட்சியின் தலைவர்களினதும், அதன் பங்காளர்களினதும் தலையாய பொறுப்பாகும்.