நாட்டிலுள்ள 06 பேரில் ஒருவருக்கு நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி ஆகிய நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிசனக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் விசேட நிபுணர் சந்திராணி ஜயவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் அதிக தாக்கம் செலுத்துவதாகவும், ஆண்களை விட பெண்களிடத்திலேயே இந்த நாட்பட்ட நோய் அதிகம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த கல்வித் தரம் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் ஏற்படும் வீதம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.