பத்து நிமிடத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்!

நமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்களை நமது சருமத்தில் பயன்படுத்தி வருவதால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.

நமது சருமத்தை பொலிவாக்கும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை நாம் வாங்கினால், அது அந்த விற்பனையாளர்களுக்கு தான் அதிக லாபத்தை ஈட்டுத்தரும்.

ஆனால் நமக்கு முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் போன்ற பல்வேறு சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் கொண்டுச் சென்று விடும் என்பதை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நம்மை சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மாசுக்கள் மற்றும் கண்ட க்ரீம்கள் மூலம் நம்முடைய முகமானது பொலிவினை இழந்து கழுத்து, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக கருமையை உண்டாக்கி, நம் முகத்தின் அழகையே கெடுக்கிறது.

எனவே நமது அழகை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை போக்குவதற்கு நமது வீட்டிலே இருக்கும் இயற்கையான டிப்ஸ் இதோ.

எலுமிச்சை

3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.

இதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள விட்டமின் C நமது சரும அழகை மேம்படுத்துகிறது. எனவே உலர்த்திய ஆரஞ்சு தோலில் செய்த பொடியுடன், 1 டேபிள் டீஸ்பூன் பால் அல்லது தயிரை கலந்து, கழுத்தின் கருமைப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன்

1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

தக்காளி

தக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. எனவே இந்த தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பின் இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.

பப்பாளி

பப்பாளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தாலே நமது சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சமஅளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.