நாம் தேன்கூடுகளை பார்த்தாலே கொஞ்சம் தள்ளிசென்று விடுவோம். நமக்கு எதுக்கு வம்பு அதன் அருகே சென்றால் கொட்டி விடும் என்று பயந்துகொண்டிருப்போம்.
ஆனால் எகிப்தில் ஒரு வாலிபர் தேனிக்களை செல்லமாக தாடியில் வளர்த்து வருகின்றார். இந்த சம்பவம் உலகில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்து நாட்டை சேர்ந்தவர் முஹமது ஹக்ராஸ், இவர் தேனீக்களை கொண்டு தாடியை வளர்த்து வருகிறார். இறந்த பெண் தேனீயின் ஹார்மோன்களை தன்னுடைய தாடையின் கீழ் ஒரு பாக்சில் கட்டிக் கொள்கிறார் ஹக்ராஸ்.
இதனால், பல்வேறு தேனீக்கள் அவர் தாடைக்குக் கீழ் பகுதியில் தாடி போல் வந்து மொய்க்கின்றது. இதனை மக்களுக்கு தெரியபடுத்துவதற்காக இப்படி செய்கிறார் என்று முஹமது ஹக்ராஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தேனீக்களை கண்டு மனிதர்கள் பயப்படுகின்றனர். எனவே தேனீக்கள் ஆபத்தானவை அல்ல என்று உணர்த்துவதற்காகவே இது போன்று செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.