தர்மபுரி மாவட்டம் இன்டூர் சின்னகனகம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் தர்ஷினி (11). இவர் அதகபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். Êசம்பவத்தன்று வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தர்ஷினி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் அவரது உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து பின்னர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்ற தர்ஷினி யாரிடமும் பேசாமல் மிகவும் சோகமாக இருந்தார்.
அப்போது சக தோழிகளிடம் நாளை முதல் பள்ளிக்கு வரமாட்டேன் என்று கூறினார். பின்னர் தன்னிடம் இருந்த பென்சில்களை தனது தோழிகளுக்கு கொடுத்தார். அப்போது எதற்காக பேனா, பென்சில்களை எங்களிடம் கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு எனது நினைவாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறினார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது தோழிகளுக்கு தெரியவில்லை. மாணவி தற்கொலை செய்து கொண்ட பின்னர்தான் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.