தேசிய உபத்திரவத்தின் அறிகுறிகள் பற்றி கூறும் மகிந்த

அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள், விசேட கொடுப்பனவுகள் போன்ற கையளிப்புகள் வழங்கப்படுவது பாரதூரமான தேசிய உபத்திரவத்தின் அறிகுறிகள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து அனைவரும் கவனம் செலுத்தியிருக்கும் தருணத்தில் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் ஆறு உபகுழுக்களின் யோசனைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, தேர்தல் முறையில் மாற்றம் தொடர்பான வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இந்த உப குழுக்கள் அந்த பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.