43,000 முறை கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி

மெக்ஸிகோ நாட்டில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பொலிஸ், நீதிபதி, பாதிரியார் உள்ளிட்ட பல நபர்களால் 43,000 முறைக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Karla Jacinto என்ற இளம்பெண் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் சிறுமிக்கு 12 வயதாக இருந்தபோது வறுமையின் காரணமாக பெற்றோர் சிறுமியை ஒரு கும்பலிடம் விலைக்கு விற்றுள்ளனர்.

மெக்ஸிகோவில் உள்ள Guadalajara என்ற நகருக்கு கடத்தப்பட்ட அச்சிறுமி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளார்.

 

12 வயது முதல் 16 வயது வரை சிறுமியை 43,000 ஆண்கள் கற்பழித்துள்ளதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 30 ஆண்கள் என 4 ஆண்டுகள் சிறுமியின் வாழ்க்கை இப்படியே கழிந்துள்ளது.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பாதிரியார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு ஆண்களும் தன்னை கற்பழித்ததாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

 

சிறுமியின் அவல நிலை வெளியே வரத்தொடங்கியதும் கடந்த 2008-ம் ஆண்டு அவர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது 24 வயதை அடைந்துள்ள அப்பெண் தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் வாட்டிகன் சென்று போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பாலியல் தொழிலில் பெண்கள் கட்டாயப்படுத்தி ஈடுப்படுத்தப்படுவதை தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.