வருடத்தில் மற்றைய அனைத்து மாதங்களும் 30,31 நாட்களுடன் இருக்கும் போது ஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.
நாட்காட்டிகள் விவசாயத்திற்கான பருவமாற்றங்களை எதிர்வுகூறுவதற்காகவே அடிப்படையில் உருவாக்கப்பட்டன. முதலாவது உரோம நாட்காட்டியில் 304 நாட்களே இருந்தன.
இப்போதைய தை மற்றும் மாசி மாதங்கள் இருக்கவில்லை!
304 நாட்களைக்கொண்ட நாட்காட்டி சரியாக பருவமாற்றங்களை வருடாந்தம் தராததால் அதில் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.
நாட்காட்டி சரியான பருவமாற்றத்தை காட்டாமைக்கான காரணம் பூமி வருடத்தை சுற்ற எடுக்கும் நாட்களான 365 1/4 என்பதை இந்த நாட்காட்டி சரியாக கணிப்பிடவில்லை.
Numa Pompilius என்ற அரசர் ஜனவரி, ஃபெப்ரவரி (தை, மாசி) என்ற இரு மாதங்களையும் இணைத்து 355 நாட்களைக்கொண்ட புதிய நாட்காட்டியை உருவாக்கினார்.
எனினும் அதுவும் சரியான பருவமாற்றத்தை காட்டவில்லை. (காரணம், பூமி சுற்றுகைக்கு 10 நாட்கள் வித்தியாசப்பட்டன.
எனவே, மேலும் ஒரு திருத்தமாக 10 நாட்களைக்கொண்ட Mercedinus எனும் மாதத்தை 13 ஆவது மாதமாக இணைத்தார் பொம்பிலியுஸ். ஆனால், 13 மாதங்கள் என்பது சந்திர சுற்றுகைக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை.
பின்னர் வந்த அரசர் Julius Caesar (யூலியஸ் சீசர்) அவ் நாட்காட்டியை முற்றாக தவிர்த்து, 13 ஆம் மாதமான மேர்கிறிடினஸில் இருந்து ஒவ்வொரு மாதத்திற்கும் சில நாட்கள் என்ற ரீதியில் 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார். யூலை என்பது யூலியஸ் சீசரின் பெயரில் இருந்து வந்த மாதமாக கருதப்படுகிறது.
யூலை தான் பிறந்த மாதமாகவருவதனால் அது ஏனைய சில மாதங்களை விட குறைவான நாட்களைக்கொண்டிருப்பதை விரும்பாத சீசர், வருடத்தின் இறுதி மாதமாக விளங்கிய ஃபெப்ரவரியில் இருந்து 1 நாளை எடுத்து யூலையுடன் இணைத்துகொண்டார்! ஃபெப்ரவரிக்கு 29 நாள் ஆனது.
சீசருக்குப் பின் வந்த Augustus (ஒகஸ்துஸ்) தனது பெயரில் ஒரு மாதம் இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால் தான் பிறந்த மாதத்திற்கு ஓகஸ்ட் என பெயர் மாற்றம் செய்ததுடன்; எனினும் ஓகஸ்டில் 30 நாட்களே இருந்தன.
சீசரை விட தான் குறைந்தவன் அல்ல என காட்டுவதற்காக வருட இறுதி மாதமான ஃபெப்ரவரியில் இருந்து மீண்டும் ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓகஸ்ட் 31 ஆனது, ஃபெப்ரவரி 28 ஆக மெலிந்தது.
புவி சுற்றுகையை சரிசெய்ய 4 வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு தேவைப்பட்ட ஒரு நாளை வருடத்தின் இறுதிமாதமாகிய ஃபெப்ரவரியுடன் இணைத்துக்கொண்டார்கள்.
நாட்காட்டியின் தொடக்க மாதமாக மார்ச் (பங்குனி) மாதம் விளங்கியது. தொடக்க மாதம் மார்ச் என்பதால் தான் ஜனவரி, ஃபெப்ரவரியை பொம்பிலியுஸ் இறுதியாக சேர்த்துக்கொண்டார்.
பின்னர், காலப்போக்கில் ஜனவரி மாதத்தை முதலாவது மாதமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. காரணம் தெரிந்தவர்கள் கருத்திடவும்.) இதனால், ஃபெப்ரவரி இரண்டாம் மாதமாகியது.
இந்த மாற்றம் நடை பெற்றதால்த்தான் Septum (7) Oct (8) Nano (9) Deca (10) எனும் பொருட்பட்ட மாதங்கள் சம்பந்தமில்லாமல் வேறு இடங்களுக்கு மாறியுள்ளன.
உதாரணமாக ஏழு எனும் பொருள் படும் september (Septum / sept) சம்பந்தமில்லாமல் 9 ஆவது மாதமாக உள்ளது. ஜனவரி, ஃபெபரவரி இறுதி மாதங்களாக இருந்தபோது september சரியான இடத்தில் இருந்திருக்கும்!
ஆனால், இவ்வாறு படிப்படியாக மாற்றம் பெற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாட்காட்டி, அச்சு அசலாக பலவருடங்களுக்கு முன்னர் உருவாக்கம் பெற்ற மதமற்ற தமிழர்களின் நாட்காட்டியை ஒத்து அமைந்துவிட்டது.
இதனால் அதிருப்தியடைந்த போப் 3ஆம் கிரகெரி 1752 ஒக்டோபர் மாதத்தில் சில நாட்களை கழித்து, தற்போது பாவனையில் உள்ள கிரகெரியன் நாட்காட்டியை உருவாக்கினார்.