இன்றைய ராசி பலன் 05-12-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராட்டமான நாள்.

  • கடகம்

    கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. இரவு 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு
    வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறு
    பட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

  • மகரம்

    மகரம்: இரவு 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கெள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். இரவு 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.