இது வேற்றுகிரகவாசிகளின் விண்கலமா? ஆச்சரியத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்

பிரித்தானியாவில் வேற்றுகிரவாசிகளின் விண்கலம் போன்று தோன்றிய பனிப்படலம் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

பிரித்தானிய நாட்டில் வடகிழக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள டென்பிக்ஷைர் அருகே இருக்கும் டிரெமெய்ர்ச்சியான் கிராமத்தில் தான் இந்த அரிய காட்சி தென்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை வான்வெளியில் வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்தும் விண்கலத்தைப் போன்ற இந்த பனிக்குவியல் காணப்பட்டது.

அதிகாலை தனது செல்லநாயுடன் நடைபயிற்சிக்கு சென்ற ஹன்னா பிலான்ட்போர்ட் என்ற 33 வயது பெண் இந்த அழகிய காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார்.

பனிக்காலங்களில் தரையில் இருந்து வெளியாகும் வெப்பமானது இப்படி மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் ஹன்னா சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.