பொதுவாக நாம் மசாஜ் செய்வதினால் நம்முடைய உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலின் மீது சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க செய்கிறது.
மசாஜ் செய்யும் போது, நாம் ஸ்பூன் வைத்து செய்வதால் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
எண்ணெய்யை பயன்படுத்தி ஸ்பூன் வைத்து மசாஜ் செய்வதால், அந்த எண்ணெய்களை நமது சருமம் எளிதில் உறிஞ்சி கொள்கிறது.
எனவே நாம் தொடர்ந்து 10 நாட்கள் கீழிருந்து மேல் நோக்கி என்ற முறையில், மசாஜ் செய்து வந்தால், தொங்கும் தசைகள் இறுக்கம் அடைந்து சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
தேவையான பொருட்கள்
- ஸ்பூன்
- ஐஸ்கட்டி
- தண்ணீர்
- ஆலிவ் ஆயில்
ஸ்பூன் மசாஜ் செய்வது எப்படி?
நாம் முதலில் முகத்தை நன்றாக கழுவி, பருத்தி துணியால் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும்.
பின் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலில் ஒரு ஸ்பூனை ஒரு நிமிடம் ஊற வைத்து, அந்த ஸ்பூனின் பின் பகுதியைக் கொண்டு நாடியில் இருந்து மேல் நோக்கி கன்னம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
பின் ஸ்பூன் ஆறினால் அந்த எண்ணெய்யில் மீண்டும் ஊறவைத்து இதே போல் 10 நிமிடம் செய்து வர வேண்டும்.
கண்களுக்கு அடியில் இருக்கும் சதைப் பைகளை போக்குவதற்கு, சுத்தமான நீரில் சில ஐஸ் கட்டிகளை போட்டு அதில் ஸ்பூனை வைக்க வேண்டும்.
பின் அந்த ஸ்பூன் குளிர்ச்சியானதும், அதை எடுத்து கண்களுக்கு அடியில் மெதுவாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
ஸ்பூன் அதன் குளிர்ச்சி தன்மையை இழந்து விட்டால் மீண்டும் அந்த ஐஸ் தண்ணீரில் வைத்து மசாஜ் செய்து வர வேண்டும் . இதனால் நமது சருமத்தில் சுருக்கம் அடையச் செய்யாமல் பாதுகாக்கிறது.