மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீக தத்துவங்கள் பெரிதும் உதவுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம் இன்று இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெம்பலஇ ரத்தொளுகம மெதடிஸ்த தேவாலயத்தின் இருநூறாவது ஆண்டுநிறைவு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

பாதைகளை அமைத்தல், கட்டிடங்களை அமைத்தல் போன்ற பௌதீக அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மனிதனது ஆன்மீக பண்பாடுகள் வீழ்ச்சியடைந்து.

மக்களின் நல்லொழுக்கம் அபிவிருத்தியின் ஒரு முக்கிய அளவுகோலாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவ்வாறு பிரச்சினைகள் இருக்குமானால் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.