முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறி இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்ப இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது.
இது குறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அவர் இறக்கவில்லை , அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கபட்டு தீவிர கண்கானிப்பில் வைக்கப்ப்ட்டுள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.மேலும், இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல்வருக்கு டிசம்பர் 5ஆம் தேதி இப்படி ஆகும் என்று ஜோதிடர் ஷெல்வி கூறியிருந்தார். அவரது வார்த்தைகள் தற்போது மெய்க்கும் விதமாக முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது. அவர் கணித்து வெளியிட்ட வீடியோ ஆதார இதோ….