பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15மிமீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது.
பின் உதிர்ந்த கண் இமை முடிகள் மீண்டும் முழுமையாக வளர 8 முதல் 10 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது.
கண் இமைகளானது, நம்முடைய இரண்டு கண்களையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது,கண்களை அழகாகவும், வசீகரமாகவும் காட்டுகிறது.
நாம் அன்றாடம் கண் இமைகளுக்கு தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம், கண் இமைகள் உதிரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே சில இயற்கையான முறைகளை பயன்படுத்தி, கண் இமை முடிகளை அடர்த்தியாக வளரச் செய்து நமது கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
- விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சியில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும் இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.
- ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஈமு எண்ணெய் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் கண் இமை முடியை வலுவாக்கி நன்கு வளரச் செய்கிறது.
- சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும். இதனால் நன்கு அடர்த்தியான கண் இமை முடிகள் கிடைக்கும்.
- தினமும் சாதரணமாக கண் இமைகளை மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே நம்முடைய விரல்களில் ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.
- விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெய்யை மட்டும் தனியாக எடுத்து, தினமும் இரவில் சில துளிகளை எடுத்து கண் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.
- வாசனை இல்லாத க்ரீன் டீயை புதிதாக தயாரித்து, அதை சிறிது நேரம் குளிர வைத்து, பின் அந்த க்ரீன் டீயை ஒரு பஞ்சுப் பொதியில் எடுத்து, கண் இமை மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் இமை முடி வலுவாகி முடி உதிர்வதை தடுக்கப்படும்.